தக்காளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெள்ளரிக்காய், தக்காளியை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
வெள்ளரிக்காய் - 1/2 துண்டு,
செய்முறை :
தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.