லைஃப்ஸ்டைல்
கோதுமை பிரெட் ஆம்லெட்

சத்து நிறைந்த கோதுமை பிரெட் ஆம்லெட்

Published On 2020-01-03 04:42 GMT   |   Update On 2020-01-03 04:42 GMT
காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்யலாம். இன்று முட்டை, பிரெட் வைத்து ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கோதுமை பிரெட் - 4 ஸ்லைஸ்
முட்டை - 3
வெங்காயம் - 1
கொத்தமல்லி - அரை கப்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்
பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

தவா சூடானதும், வெண்ணெய் போட்டு உருக்கியதும் பிரெட் ஸ்லைசை அதன் மீது வைத்து இருபக்கவும் சூடு செய்து எடுக்கவும்.

பின்னர், அதே தவாவில் மீண்டும் வெண்ணெய் போட்டு உருகியதும், தயாராக உள்ள முட்டை கலவையை அதன் மீது ஊற்றி பரப்பி வேகவிடவும்.
முட்டை வெந்ததும், அதன் மீது பிரெட் ஸ்லைஸ் வைத்து நான்கு புறமும் மடித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான சத்து நிறைந்த கோதுமை பிரெட் ஆம்லெட் ரெடி..!

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News