லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த அரைக்கீரை பருப்பு குழம்பு

Published On 2019-06-06 05:00 GMT   |   Update On 2019-06-06 05:00 GMT
அரைக்கீரை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. இன்று சத்து நிறைந்த அரைக்கீரை பருப்பு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

அரைக்கீரை - ஒரு கட்டு
எண்ணெய் - 1/4 குழிகரண்டி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
துவரம்பருப்பு - 1/2 ஆழாக்கு

வறுத்து அரைக்க :

துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8

தாளிக்க :

கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

துவரம்பருப்பை நன்கு வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

அரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொண்டு, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி குழைய வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள அரைக்கீரையை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.

அரைக்கீரை வெந்ததும் மசித்து அதனுடன், வேகவைத்த துவரம்பருப்பை சேர்க்க நன்றாக கிளற வேண்டும்.

கீரையை இறக்கும் போது வறுத்து அரைத்த பருப்பு பொடியை தூவி இறக்கவும்.

சுவையான அரைகீரை பருப்பு குழம்பு தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News