லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த கீரை ஊத்தப்பம்

Published On 2018-09-01 05:38 GMT   |   Update On 2018-09-01 05:38 GMT
கீரையில் செய்த பல்வேறு உணவுகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கீரையை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
அரைக்கீரை  - ஒரு கைப்பிடி அளவு,
பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
இட்லி அரிசி - 250 கிராம்,
உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - ஒரு கப்,
இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று
எண்ணெய் - 100 மில்லி,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

கீரைகளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கிய பின்னர் முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பங்களாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.

சத்து நிறைந்த கீரை ஊத்தப்பம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News