லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த கோதுமை ரவை வெஜிடபிள் சூப்

Published On 2018-07-02 04:22 GMT   |   Update On 2018-07-02 04:22 GMT
சர்க்கரை நோயாளிகள் கோதுமை ரவை, வெஜிடபிள் சேர்த்து சூப் செய்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

விருப்பமான காய்கறிகள் - 1 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1 அல்லது 1 1/2 கப்,
பட்டை - 1,
கிராம்பு - 1,
ஏலம் - 1,
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
கொத்தமல்லி இலை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
கோதுமை ரவையில் சமைத்த சாதம் - 2 டேபிள்ஸ்பூன்.



செய்முறை


காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.

உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்

இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பருப்பு வேக வைத்த நீரை சேர்த்து வேகவிடவும்.

வெந்ததும், கோதுமை ரவை (பெரியது) சமைத்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

கடைசியாக உப்பு, மிளகுத்தூள் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.

கோதுமை ரவை வெஜிடபிள் சூப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News