லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான சத்து மாவு அடை

Published On 2016-09-12 05:06 GMT   |   Update On 2016-09-12 05:07 GMT
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சத்து மாவில் அடை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பார்லி - 50 கிராம்
ராஜ்மா - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
கொள்ளு - 50 கிராம்
சோயா - 50 கிராம்
வரமிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 பெரியது
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொள்ளு, சோயா அனைத்தையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஊற வைத்த பொருட்களுடன் மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான சத்து மாவு அடை ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News