லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான வெண்டைக்காய் பொரியல்

Published On 2016-09-02 06:31 GMT   |   Update On 2016-09-02 06:32 GMT
வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. வெண்டைக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பெருட்கள் :

வெண்டைக்காய் - 200
வெங்காயம்  -  1
மிளக்காய் தூள்  - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு -  1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை  - சிறிது
உப்பு  -  தேவையான அளவு
தேங்காய் துருவல் -  1 டேபிள் டீஸ்பூன்
எண்ணெய்  - 2 டேபிள் டீஸ்பூன்

செய்முறை :

* முதலில் வெண்டைக்காயை கழுவி தண்ணீர் காயும் வரை வைத்து நறுக்கிகொள்ளவும். அதனை ஒரு கடாயில் போட்டு (எண்ணெய் ஊற்றக்கூடாது) லேசான தீயில் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

* பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிய கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்தபின் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைக்கவும்.

* பின் திறந்து பிரட்டி விட்டு அடிபிடிக்காமல் வதக்கவும்.

* கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

* வெண்டைக்காய் பொரியல் ரெடி.  
    
குறிப்பு : வெண்டைக்காய் பொரியலை சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News