லைஃப்ஸ்டைல்

சுவையான பருப்பு ரசம் செய்வது எப்படி

Published On 2016-08-31 03:54 GMT   |   Update On 2016-08-31 03:54 GMT
பருப்பு ரசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தக்காளி - ஒன்று
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பூண்டு - 5 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பருப்புத் தண்ணீர் - 100 மில்லி (துவரம் பருப்பு வேக வைத்து வடித்த தண்ணீர்)

செய்முறை :

* புளியை சிறிது நேரம் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாயை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை கையில் நன்றாக பிசைந்தோ அல்லது மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றியோ தனியே வைத்துக் கொள்ளவும்.

* கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின் தட்டி வைத்துள்ள பூண்டு சீரகம் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்.

* பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியுடன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை சிறிதளவு இதனுடன் சேர்த்துத் தாளிக்கவும்.

* அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் லேசாக கொதிக்க விடவும்.

* பிறகு இதில் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும்.

* கொதி வரும்போது அடுப்பை அணைத்து, இறுதியில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை ரசத்தின் மேலே தூவவும்.

* சுவையான பருப்பு ரசம் தயார்.

குறிப்பு:

* பருப்பு ரசம் கொதிக்கக் கூடாது. ஆனால் புளி, தக்காளி ரசத்தைக் கொதிக்க விட்டால்தான் அதன் பச்சை வாசனை போகும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News