லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான கார்லிக் பிரட்

Published On 2016-06-25 01:39 GMT   |   Update On 2016-06-25 01:39 GMT
கார்லிக் பிரட்டை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இதை செய்வது மிகவும் ஈஸி.
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரட் - 4 துண்டுகள்
பூண்டு - 8 பற்கள்
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* பூண்டை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பௌலில் வெண்ணெய், பூண்டு பேஸ்ட், சில்லி ப்ளேக்ஸ், உப்பு, கொத்தமல்லி, சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிரட் துண்டுகளின் 4 பக்க முனைகளையும் நீக்கிவிட்டு, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை முன்னும், பின்னும் தடவிக் கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் ஆலிவ் எண்ணெய் தடவி பிரட் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், கார்லிக் பிரட் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News