லைஃப்ஸ்டைல்

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

Published On 2016-06-14 02:52 GMT   |   Update On 2016-06-14 02:52 GMT
டிராகன் பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. டிராகன் ஃபுரூட் ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

டிராகன் பழம் - 2
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி - தேவையான அளவு
குளிர்ந்த நீர் - தேவையான அளவு

செய்முறை :

* டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும்.



* பின் அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

* பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன் ஃப்ரூட் ஜூஸ் ரெடி!

இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News