லைஃப்ஸ்டைல்

முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி

Published On 2016-05-11 01:46 GMT   |   Update On 2016-05-11 01:46 GMT
சத்தான சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

அரிசி - 500 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
தேங்காய் - கால்மூடி
சீரகம் - கால் டீஸ்பூன்
துவரம் பருப்பு - 50 கிராம்
பாசிப் பருப்பு - 50 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை:

* அரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

* வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* மூன்று பருப்புகளையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரிசி, பருப்புடன், காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, சீரகம், நறுக்கிய முருங்கைக் கீரையைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

* தோசைக்கல்லை சூடாக்கி, இந்த மாவை ஊற்றி வார்த்து எடுக்கவும்.

* சுவையான சத்தான முருங்கைக்கீரை அடை ரெடி.

குறிப்பு :

அடைமாவை புளிக்க வைத்து சுட்டால், அடை சுவையாக இருக்காது. மாவு அரைத்து சுமார் அரை மணி நேரத்தில் அடையைச் சுடவும்.

அடைதோசை, பணியாரம் சுடும்போது அதன் சுவை மொறு மொறுவென இருப்பதற்கு, பச்சரிசி மாவைச் சேர்க்கலாம். நம் தேவைக்கேற்ப ஊறவைக்கும் அரிசியின் அளவு அல்லது பாதியளவு பச்சரிசியைச் சேர்க்கலாம்.

- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News