லைஃப்ஸ்டைல்

முருங்கை பூ சூப் செய்வது எப்படி

Published On 2016-04-30 03:09 GMT   |   Update On 2016-04-30 03:09 GMT
முருங்கைப்பூ மிகவும் சத்தானது. இதை பொரியல் மட்டுமல்ல சூப் செய்தும் சாப்பிடலாம். பெண்களுக்கு மிகவும் நல்லது இந்த சூப்.
தேவையான பொருட்கள் :

முருங்கை பூ - 2 கைப்பிடி
புளி - சிறிய எலுமிச்சை பழ அளவு
தக்காளி - 1
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி( சிறதளவு நீரில் கரைத்து கொள்ளவும்)
உப்பு - சுவைக்கு

தாளிக்க :

மிளகு - 1 தேக்கரண்டி ( தூளாக்கவும்)
சீரகம் - அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை :

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை சிறிதளவு நீரில் கரைத்து அத்துடன் முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு கொதிக்க வையுங்கள்.

* அடுத்து அதில் பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள்.

* இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமலுக்கு சுவையான மருந்து இது.

Similar News