பொது மருத்துவம்

கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..?

Published On 2024-05-16 09:43 GMT   |   Update On 2024-05-16 09:43 GMT
  • கருஞ்சீரகத்தில் தைமோ என்ற வேதிப்பொருள் உள்ளது.
  • குறிப்பாக பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிறு உப்புசமாக காணப்பட்டு சிறுநீர் கழிப்பது போல் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

உடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் நாம் உண்ணும் உணவே மருந்தாக உள்ளது. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வரிசையில் வெந்தயம், மிளகு, சீரகம் போன்றவற்றை தொடர்ந்து கருஞ்சீரகமும் இதில் அடங்கும்.

ஆனால் இந்த கருஞ்சீரகத்தை அனைவராலும் எடுத்துக் கொள்ள இயலாது. அதுமட்டுமின்றி இதனை தினந்தோறும் சாப்பிடவும் கூடாது. சரியான அளவில் இதனை உட்கொள்வது மட்டுமின்றி தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் கருஞ்சீரகத்தை யாரெல்லாம் எடுக்கொள்ளலாம் யாரெல்லாம் எடுத்துக் கொள்ள கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

கருஞ்சீரக பயன்கள்:

கருஞ்சீரகத்தில் தைமோ என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் நமது உடலுக்கு தேவையான கால்சியம் இரும்புச்சத்து என தொடங்கி அனைத்து வித சத்துக்களும் உள்ளது. கருஞ்சீரகத்தை பாக்டீரியாக்களின் எதிரி என்றே நாம் கூறலாம். அத்தோடு ரத்தத்தை சுத்திகரிக்க மிகவும் பயன்படுகிறது. மேலும் நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவும். அதுமட்டுமின்றி புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை தடுக்கவும் பயன்படுகிறது.

கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடலாம்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள்:

கருஞ்சீரகம் 50 கிராம்

ஓமம் 100 கிராம்

வெந்தயம் 1/4 கிலோ

இவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு டீஸ்பூன் என்ற அளவில் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன் குடித்து வந்தால் சர்க்கரை முற்றிலும் குறையும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். பூச்சிக்கடியால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை 4 கிராம் என்ற அளவில் தினம்தோறும் தண்ணீரில் கலந்து ஒரு வாரத்திற்கு குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.


குடற்புழு பிரச்சனை உள்ளவர்களும் இந்த கருஞ்சீரக தண்ணீரை குடிக்கலாம். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிறு உப்புசமாக காணப்பட்டு சிறுநீர் கழிப்பது போல் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

யாரெல்லாம் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது:

புதிதாக திருமணமான பெண்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது. கருஞ்சீரகம் கரு உருவாகுவதை தடுக்கும் ஆற்றல் படைத்தது. எனவே குழந்தையை எதிர்நோக்கும் தம்பதியினர் இதனை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். அவர்கள் மட்டுமின்றி கருத்தரித்த பெண்களும் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.

உயர்ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள கருஞ்சீரகம் உதவி புரிந்தாலும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது மேற்கொண்டு ரத்த அழுத்தம் குறைந்து பல சிக்கல்களை காண நேரிடும்.

Tags:    

Similar News