பொது மருத்துவம்

முதுகெலும்பு உடலின் தண்டுவடத்தை பாதுகாக்கிறது

Published On 2023-11-06 15:03 IST   |   Update On 2023-11-06 15:03:00 IST
  • முதுகெலும்பு நமது உடலின் தண்டுவடத்தை பாதுகாப்பாக வைக்கிறது.
  • நமது உடல் நேராக நிற்கவும், வளையவும், அமரவும் உதவுகின்றன.

நமது உடல் நேராக நிமிர்ந்து நிற்பதற்கு காரணமாக அமைவது முதுகெலும்பு ஆகும். கழுத்து முதல் இடுப்பு வரை வரிசையாக, சற்று வளைந்து அமைந்துள்ள 33 எலும்புகளை நாம் `முதுகெலும்பு' என்கிறோம்.

கழுத்துப்பகுதியில் 7 எலும்புகளும், நெஞ்சுக்கூட்டிற்கு பின்புறமாக 12 எலும்புகளும், இடுப்புப்பகுதியில் 5 எலும்புகளும் மற்றும் கீழ் இடுப்புப் பகுதியில் 9 எலும்புகளுமாக இவை அமைந்துள்ளன. இந்த எலும்புகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நமது உடல் நேராக நிற்கவும், வளையவும், அமரவும் காரணமாக அமைகின்றன.

இந்த முதுகெலும்பு நமது உடலின் முக்கிய பகுதியான தண்டுவடத்தை பாதுகாப்பாக வைக்கிறது. முதுகெலும்பு பாதிப்பு ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. உடல் எடை அதிகரிப்பது, கம்ப்யூட்டர் முன்பாக எப்போதும் குனிந்து உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது, முதுகில் அதிக எடை கொண்ட பொருட்களை சுமப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வது, வளைந்த இருக்கை அமைப்பு கொண்ட வாகனங்களை நீண்ட நேரம் ஓட்டுவது, எலும்புகளின் அடர்த்தி குறைவது, முதுகுத்தண்டின் மீது அதிகமான அழுத்தத்தை உருவாக்குவது போன்ற உடல் ரீதியான காரணிகளும், மன இறுக்கம், மனச்சோர்வு, அதீத கவலை போன்ற உளவியல் சார்ந்த காரணிகளும் இவற்றில் முக்கியமானவை.

முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் பொருட்கள், முட்டைக்கோஸ், புரோக்கோலி, கீரை, இஞ்சி, துளசி மற்றும் லவங்கப்பட்டை மற்றும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து உண்ண வேண்டும். சத்தான உணவுகளை உட்கொள்வது, முதுகு தொடர்பான எளிய உடற்பயிற்சி களை செய்வது, நிமிர்ந்த நிலையில் உட்காருவது உள்ளிட்ட செயல்முறைகளை கடைப்பிடித்தால் முதுகெலும்பு தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமாக வீறு நடைபோடலாம்.

Tags:    

Similar News