பொது மருத்துவம்

பெண் குழந்தைகளுக்கு இயற்கை அளித்துள்ள வரம்...!

Published On 2023-11-24 13:34 IST   |   Update On 2023-11-24 13:34:00 IST
  • ஒரு பெண் உருவாக இரண்டு `எக்ஸ்' குரோமோசோம்கள் தேவை.
  • `ஒய்' அரைகுறையாக வளர்ச்சி அடைந்த ஒரு குரோமோசோம்.

தாய்மை என்ற பேறுக்காக பெண்ணுக்கு இயற்கை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறது. `இம்முனோ குளோபின்' என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதம் பெண்களின் உடலில் மட்டுமே அதிக அளவில் உள்ளது.

ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் `எக்ஸ்', `ஒய்' குரோமோசோம்களில் கூட பெண் இனத்தை உருவாக்கும் `எக்ஸ்' குரோமோசோம்தான், வலிமையையும் ஆரோக்கியமும் முழுமையான வளர்ச்சியும் கொண்டது. ஒரு பெண் உருவாக இரண்டு `எக்ஸ்' குரோமோசோம்கள் தேவை.

ஆணுக்கு ஒரு `எக்ஸ்', ஒரு `ஒய்' என்று இரண்டு குரோமோசோம்கள் தேவை. இதில் `ஒய்' அரைகுறையாக வளர்ச்சி அடைந்த ஒரு குரோமோசோம்.

மேலும், தற்காப்பு சக்தியை அதிகம் உண்டாக்கும் `ஹீமோபைலியா ஜிடென்ராஸ்' என்கிற ஹார்மோன் எப்போதும் கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருந்தால் மட்டுமே அக்குழந்தைக்கு செல்கிறது.

இது ஒரு போதும் தாயிடம் இருந்து ஆண் குழந்தைக்கு செல்வதில்லை. எப்படி ஆண் குழந்தையை தவிர்த்து, பெண் குழந்தைக்கு மட்டும் இந்த தற்காப்பு சக்தி செல்கிறது என்பது விஞ்ஞானத்திற்கே புலப்படாத புதிராக இருக்கிறது. இதனால்தான் பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து விடுகின்றன. உடல் வலிமை வேறு, உடலின் எதிர்ப்புச் சக்தி வேறு.

வலிமையை ஆணுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை பெண்ணுக்கும் இயற்கை வரமாக அளித்துள்ளது.

Tags:    

Similar News