பொது மருத்துவம்

'வெரிகோஸ் வெயின்' நோயில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?

Published On 2023-02-28 13:31 IST   |   Update On 2023-02-28 13:31:00 IST
  • இது ஒரு ரத்த குழாய் சம்பந்தமான நோய்.
  • ரத்த ஓட்டத்தை தடைபடுத்துகிறது.

'வொரிகோஸ் வெயின்' என்பது ரத்தக் குழாய்களில் ஏற்படும் புடைப்பு சுருள் பிரச்சினையாகும். இந்த நோய் ஏற்பட பரம்பரை, வயது, உடல்பருமன் ஆகியவை காரணமாக அமைகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் ரத்த குழாய்கள் சுருள் சுருளாக புடைத்துப்போய் காணப்படும்.

இது ஒரு ரத்த குழாய் சம்பந்தமான நோய். நமது முழங்காலுக்கு பின்புறம் உள்ள ரத்த குழாய்கள் மூலம் ஒருவித வலிகளை உணடாக்குகின்றன. இவை ரத்த ஓட்டத்தை தடைபடுத்துகிறது. இந்த ரத்த குழாய் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் கால்களை நீட்டி மடக்கும் போது கால்கள் வீங்கி வலி உண்டாகிறது. இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நரம்புகள் முழங்காலுக்கு பின்புறத்தில் உருவாகின்றன.

தசையின் அடர்த்தியை ஒருவர் இழக்கும் போது தசை இடைவெளிகள் உருவாகி ரத்த குழாய் புடைப்பும், சுருளும் ஏற்பட்டு நோய் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இதனால் நரம்பு வீங்கி வலியை ஏற்படுத்தி ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் மேல் நோக்கி தள்ளப்படும். ரத்த கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தநோயின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

நாள் முழுவதும் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ வேலை பார்ப்பவர்களுக்கு இந்தநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலங்கள், உடல் பருமனால் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மயக்க மருந்து கொடுத்து புடைத்த ரத்தக் குழாயை நீக்குகின்றனர். இந்தநோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்த சிரைகளை லேசர் கதிர் கொண்டு சூடேற்றியோ அல்லது மருத்துவ பசை மூலமாகவோ அடைத்து விடுகின்றனர்.

மேற்கண்ட தகவலை படந்தாலுமூடு ரவி மெம்மோரியல் மருத்துவமனை டாக்டர் ஆர்.ஆர். அருண்பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News