பொது மருத்துவம்

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

Published On 2023-09-06 09:15 GMT   |   Update On 2023-09-06 09:15 GMT
  • காலையில் தாமதமாக எழும் பழக்கம் அன்றைய நாள் முழுவதையும் சீர்குலைக்கிறது.
  • தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

அனைத்து உயிரினங்களும் அவசியமான ஒன்று தூக்கம். மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சரியான அளவில் தூங்குவது உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்.

* முதலில் தூங்குவதற்கு சரியான நேர அட்டவணையை உருவாக்குங்கள்

* தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

* இரவில் தாமதமாக தூங்குவதும், காலையில் தாமதமாக படுக்கையில் இருந்து எழுவதும் நல்ல பழக்கம் அல்ல

* காலையில் தாமதமாக எழும் பழக்கம் அன்றைய நாள் முழுவதையும் சீர்குலைக்கிறது

* ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்

* தூக்கம் மனித செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது தூங்காதவர்களுக்கு வயிற்று நோய்கள் வரலாம்.

* சரியான ஓய்வு இல்லாதது கண்களையும் பாதிக்கும். மாணவர்கள் இரவில் தாமதமாகப் படிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும் மாறாக, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வதும், அதிகாலையில் எழுந்து படிப்பதும் அதிக பலன் தரும்.

Tags:    

Similar News