பொது மருத்துவம்

நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் எப்படி செயல்படுகிறது?

Published On 2024-04-22 10:00 GMT   |   Update On 2024-04-22 10:00 GMT
  • நுரையீரலை சுத்தமாக வைத்துகொள்ள மூச்சுப் பயிற்சி அவசியம்.
  • நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

நுரையீரல் என்பது மிக முக்கியமான உறுப்பு. தற்போது இவை அதிக பாதிப்பை சந்திக்கிறது. அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை முதலில் பார்க்கலாம்.

நிறைய காரணங்கள் உண்டு என்றாலும் மாசு மிகவும் முக்கிய காரணமாகும். அதிகரித்து வரும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசடைகிறது. இவை தவிர புகைப்பிடிப்பதும் முக்கிய காரணமாகிறது.

நுரையீரலை சுத்தமாக வைத்துகொள்ள மூச்சுப் பயிற்சி, பிராணயாமம் செய்ய வேண்டும் என்றும் சொல்வதுண்டு. ஏன் நுரையீரலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் எனில் நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் இயல்பான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும் நுரையீரல் மற்றும் அதை சுற்றியுள்ள தசைகளின் வேலைகளை தெரிந்துக்கொண்டால் மட்டுமே அதன் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். நாம் மூச்சு பயிற்சி செய்யும் போது மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும் என்று சொல்வார்கள்.

 இப்போது மூச்சை மூக்கு வழியாக உள்ளிழுக்கும் போது காற்று சூடாகவும், ஈரப்பதமாகவும் உள்ளே செல்லும். மூக்கில் இறகு போல இருக்கும் சிலியா நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுக்களை பெருமளவு அங்கேயே அகற்றி சூடாக்கி அல்லது ஈரப்பதத்தோடு மூச்சுக்குழாயிற்கு அனுப்புகிறது.

அதன்பிறகு இந்த காற்று மூச்சுக்குழாய்கள் வழியாக அல்வியோலி பைக்கு வருகிறது. இதை சுற்றி நிறைய ரத்த குழாய்க்கள் உள்ளது. கார்பன் – டை- ஆக்ஸைடு உள்ள ரத்தம் கெட்ட ரத்தம் ஆகும்.

இதை இதயத்தில் உள்ள நுரையீரல் தமனிகள் நுரையீரலுக்கு எடுத்து வரும். இந்த ரத்த குழாய்களும் அல்வியோலி பையை சுற்றியிருக்கும், நாம் சுவாசித்த சுத்தமான ஆக்சிஜன் நிறைந்த காற்றை உள்ளே அனுப்பி அது எடுத்துக்கொண்டு அந்த கெட்ட ரத்தத்தை விட்டுச் செல்லும்.

இப்போது நாம் மூச்சு வெளியே விடும்போது இந்த தேவையில்லாத கார்பன் – டை- ஆக்ஸைடு வெளியே வரும். இவை அனைத்தும் அல்வியோலி பையில் தான் நடக்கிறது. இந்த வழியாக நல்ல ரத்தம் மற்ற உடல் உறுப்புகளுக்கு சென்றடையும்.

நாம் ஒவ்வொருமுறை சுவாசிக்கும் போது உடல் உள்ளே இவ்வளது செயல்முறைகள் நடக்கிறது. இவை அனைத்து தசைகள், விலா எலும்பை சுற்றியுள்ள இண்டட்கோஸ்டல் தசைகள் மற்றும் நுரையீரல்களுக்கு கீழே உள்ள உதரவிதானம் ஆகிய அனைத்தும் வேலை செய்து தான் நமது மூச்சு உள் இழுப்பதிலும் வெளியிடுவதிலும் வேலை செய்கிறது.

Tags:    

Similar News