இரவு நேரத்தில் இந்த 7 உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்
- தயிர் இரவில் சாப்பிடும் போது செரிமானப்பிரச்சினையை ஏற்படுத்தும்.
- தக்காளி சாப்பிடுவது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
இரவுநேரத்தில் நாம் எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே நமது செரிமான உறுப்புகள் ஆரோக்கியத்துடன் செயல்படும். நாம் எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை சாப்பிட்டால் செரிமானக்கோளாறு, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்.
தயிர்
தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் இரவில் சாப்பிடும் போது செரிமானப்பிரச்சினையை ஏற்படுத்தும். மற்றும் சளி பிரச்சினையை உண்டாக்கும்.
தக்காளி
இரவுநேரத்தில் தக்காளி சாப்பிடுவது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இவற்றில் டைரமின் என்ற அமிலம் உள்ளது. இதனால் இரவு சாப்பிடும்போது மூளையின் செயல்பாடு அதிகரித்து தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.
மசாலாபொருட்கள்
மசாலா உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருந்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தை அதிகரித்து இரவுநேரத்தில் தூக்கம் வராமல் செய்துவிடும்.
காபி
இரவுநேரத்தில் காபி அருந்தக்கூடாது. காபியில் உள்ள கேஃபைன் என்ற வேதிப்பொருள் மூளையில் உள்ள நரம்புமண்டலத்தின் செயல்பாடுகளை செயல்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரவு தூக்கம் வராது.
குளிர்பானங்கள்
குளிர்ச்சியான எந்த உணவுகளை இரவுநேரத்தில் உண்ணக்கூடாது. ஐஸ்கிரீம், ஆரஞ்சு, திராட்சை பழங்களை இரவுநேரத்தில் உண்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளை இரவுநேரத்தில் உண்ணக்கூடாது. அது செரிமானப்பிரச்சினையை உண்டுபண்ணும். எனவே இரவுநேரத்தில் தவிர்த்துவிடுவது நல்லது.
கத்தரிக்காய்
கத்தரிக்காய், வெள்ளரிக்காய் மற்றும் ப்ராக்கோலி இவற்றை இரவுநேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இந்த காய்கறிகள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே இரவில் தூக்கப்பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.