பொது மருத்துவம்

வாத நோயினால் கை, கால்கள் எதனால் வீக்கம் அடைகிறது தெரியுமா?

Published On 2025-04-06 08:34 IST   |   Update On 2025-04-06 08:34:00 IST
  • புளிப்பான உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் நோய் என்பது சித்த மருத்துவத்தில் 'வளி அழல் கீஸ் வாயு' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு நோய்.

நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களை சேதப்படுத்துவதால் வருவதாகும். கை, கால், மணிக்கட்டு, கணுக்கால், விரல்கள் ஆகிய இடங்களில் நாள்பட்ட அழற்சியுடன் வீக்கத்தை ஏற்படுத்தும்.


மேலும் அவ்விடங்களில் வெப்பம், சிவப்பு நிறம், எரிச்சல் அல்லது வலியையும் உண்டாக்கும். இந்நோய் எளிதில் மருத்துவத்திற்கு அடங்காமலும், மருத்துவத்திற்கு அடங்கினும் மீண்டும் திரும்பி வருவதுமாயிருந்து, பாதிக்கப்பட்ட கீல்கள் கரடு கட்டினது போல நீட்டவும், நன்றாய் மடக்கவும், முடியாத வண்ணம் நிலைத்து விடச் செய்வதுண்டு.


இந்நோயில் தூக்கமின்மை, சிறு சுரம், காலையில் எழுந்தவுடன் கை விரல்கள், மூட்டுகளில் விறைப்புத்தன்மை, விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.


இந்நோயை ஆர்.ஏ மற்றும் 'சைக்ளிக் சிட்ருலினேடட் பெப்டைடு' (சி.சி.பி), 'நியூக்ளியர்' (ஏ.என்.ஏ) போன்ற ரத்த பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது, புளிப்பான உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவர்களது உடலில் வாதமும், பித்தமும் அதிகரித்திருக்கும். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

Tags:    

Similar News