பொது மருத்துவம்

ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம்

Published On 2022-08-02 08:18 GMT   |   Update On 2022-08-02 08:18 GMT
  • ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிட்டு சாப்பிடுவது தவறான பழக்கம்.
  • ஆப்பிளை அப்படியே சாப்பிடவும் கூடாது.

பழங்களை சரியான நேரத்தில் சாப்பிடும்போதுதான் அதன் நன்மைகள் உடலுக்கு முழுவதுமாக கிடைக்கும். ஆப்பிளை பொறுத்தவரை, சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை வேளைதான். ஆப்பிளின் தோலில் பெக்டின் என்னும் சேர்மம் காணப்படுகிறது. அது தூக்கமின்மை, நேரம் தவறி சாப்பிடுவது காரணமாக ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவும்.

காலையில் ஒரு ஆப்பிளை உட்கொண்டால் அது குடல் இயக்கத்தை தூண்டிவிடும். அதில் இருக்கும் பெக்டின் பெருங்குடலில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்களை அகற்ற உதவும். மேலும் பெக்டின் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கு வழிவகை செய்யக்கூடியது. காலை வேளையில் ஆப்பிளை சாப்பிடும்போது உடல் முழுவதும் இருக்கும் நச்சுக்களை அப்புறப்படுத்த துணை புரியும்.

ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிட்டுத்தான் பலரும் உட்கொள்கிறார்கள். அது தவறான பழக்கம். ஆப்பிளின் தோல் பகுதியில்தான் பெக்டின் இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு சாப்பிடுவது முழு பலனை தராது. குடலுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது. அதே வேளையில் ஆப்பிளை அப்படியே சாப்பிடவும் கூடாது. அதன் தோல் பகுதியை நன்றாக கழுவ வேண்டும்.

ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மெழுகு தேய்க்கப்படுவதாக கூறப்படுவதால் தோல் பகுதியை நன்கு சுத்தம் செய்துவிட்டுத்தான் உட்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News