பொது மருத்துவம்

பச்சை வாழைப்பழமும், ஆரோக்கிய நன்மைகளும்...

Published On 2022-12-16 14:03 IST   |   Update On 2022-12-16 14:03:00 IST
  • வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் சிறந்த மருந்தாகும்.

வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாகதான் இருக்கின்றன. அந்த வகையில் பச்சை வாழைப்பழத்தில் உள்ள நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்.

பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் 'அல்சர்' ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் சிறந்த மருந்தாகும். ஏனென்றால், பச்சை வாழைப்பழத்தில் 'ஸ்டார்ச்' அதிகமாக உள்ளதால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைந்து விடும்.

ரத்தம் சம்பந்தமான பல பிரச்சினைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. குறிப்பாக, ரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்தப் பழம் உதவுகிறது. பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தினை அளித்து பற்களை உறுதிப்படுத்துகிறது.

Tags:    

Similar News