பொது மருத்துவம்

ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்...

Published On 2022-06-20 08:26 GMT   |   Update On 2022-06-20 08:26 GMT
  • ஆப்பிள் பழத்தை எல்லா நேரமும் சாப்பிடுவது நல்லதல்ல.
  • ஆப்பிள் பழத்தின் தோல் பகுதியில் நார்ச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் என்பது டாக்டர்களின் பரிந்துரையாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை ஆப்பிளுக்கு இருக்கிறது. எனினும் ஆப்பிள் பழத்தை எல்லா நேரமும் சாப்பிடுவது நல்லதல்ல. ஆப்பிள் பழத்தை காலை வேளையில் சாப்பிடுவதுதான் சிறந்தது.

தற்போது நிறைய பேர் தூக்கமின்மை, தாமதமாக சாப்பிடுவது போன்ற பழக்கவழக்கங்களால் அவதிப்படுகிறார்கள். அதனால் செரிமான செயல்பாடுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. அதனை சீர்படுத்த ஆப்பிள் பழத்தை காலை வேளையில் சாப்பிடுவதே சிறந்தது. ஆப்பிள் பழத்தின் தோல் பகுதியில் பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அவை குடல் இயக்கங்கள் சீராக செயல்பட வழிவகை செய்யும். மேலும் காலை வேளையில் மற்ற பழங்களை விட ஆப்பிள் சாப்பிடுவது குடல் இயக்கத்துக்கு நலம் சேர்க்கும்.

ஆப்பிளில் இருக்கும் பெக்டின், உடலில் உள்ள லாக்டிக் அமிலத்தை பாதுகாக்க உதவும். பெருங்குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் உதவும். அத்துடன் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் காக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி புற்றுநோய் வராமல் தடுக்கவும் செய்யும். மதிய வேளையில் உணவு இடைவெளியின்போது ஆப்பிள் சாப்பிடலாம்.

மாலை வேளையிலோ, இரவிலோ ஆப்பிள் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது ஒட்டுமொத்த செரிமான செயல்பாடுகளுக்கும் எதிராக திரும்பி குடல் இயக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிடும்போது வாயு பிரச்சினை உருவாகி அதிகாலை வேளையில் அசவுகரியங்களை ஏற்படுத்தும். ஆப்பிளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கும் ஏற்றது.

Tags:    

Similar News