லைஃப்ஸ்டைல்
நட்சத்திரப்பழம்

மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய பழம்

Published On 2021-03-19 07:30 GMT   |   Update On 2021-03-19 07:30 GMT
சரும பிரச்சனை முதல் மூல நோய் பிரச்சனை வரை அனைத்திற்கும் தீர்வை அளிக்கும் நட்சத்திர பழத்தில் உள்ள மருத்துவக்குணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
நட்சத்திர வடிவத்தில் இந்த பழம் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். இந்த பழம் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.

இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கசடுகள் வெளியேறும். தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த பழம். பால் சுரப்பதற்கான ஹார்மோனை தூண்டி தாய்ப்பாலை நன்கு சுரக்கச் செய்கின்றது.

அஜீரண கோளாறு வாயுவின் சீற்றம் அதிகமாக இருக்கும்போது மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட இந்த நட்சத்திர பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

மழைக்காலத்தில் உள்ள சரும பிரச்சனைகளுக்கு இந்த பழம் சிறந்த தீர்வினை அளிக்கின்றது. இப்பழம் உண்ணும்போது சருமமானது நீர் சுத்தத்துடன் சுருக்கங்கள், பருக்களின்றி பளபளப்பாக இருக்கும்.

தாது உப்புகள், நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி வலுப்படுத்த இந்த பழம் பயன்படுகிறது. எடையைக் குறைப்பவர்களுக்கு இந்தப் பழம் நல்ல பலனைத் தருகின்றது. நட்சத்திர பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ரத்த ஓட்டமும் சீராகும்.
Tags:    

Similar News