லைஃப்ஸ்டைல்
அவல் சாப்பிட்டால் ஆரோக்கியமா வாழலாம்

அவல் சாப்பிட்டால் ஆரோக்கியமா வாழலாம்

Published On 2021-03-10 08:22 GMT   |   Update On 2021-03-10 08:22 GMT
அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அரிசியில் இருந்து வெள்ளை அவல், சிகப்பு அவல் போன்றவைகளுடன் தற்போது திணை அவல், கம்பு அவல், சோளஅவல், கேழ்வரகு அவல் என்று விதவிதமான அவல்கள் கிடைக்கின்றன. அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாகவும் சமைத்து உண்ணலாம்.

சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் சிகப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிகப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம், புட்டு போன்றவை செய்து உண்ணப்படுகிறது.

வெள்ளை நிறத்தில் இருக்கும் அவலில் உடலுக்கு தேவைப்படும் கார்போ ஹைட்ரேட், கலோரி உள்ளது. நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் இது முதலிடம் வகிக்கின்றது. மேலும் இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது.

சிவப்பு அவலில் நார்ச்சத்து , கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை காணப்படுகின்றது. பொதுவாக அவலை தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்! அவலோடு பாலும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும். அவலும் மோரும் கூட சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் அதிக தாகம் உண்டாவது தீரும். ஆனால்... அவலும் தயிரும் சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் மந்தம் உருவாகும்.

அவலில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள சிவப்பணுக்களை அதிகப்படுத்தும். அவலை இனிமேல் ஒதுக்காதீர்கள். வாரம் ஒரு முறையாவது அவலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
Tags:    

Similar News