லைஃப்ஸ்டைல்
கழுத்து வலி

கழுத்து வலியா? கலக்கம் வேண்டாம்..

Published On 2020-04-04 08:24 GMT   |   Update On 2020-04-04 08:24 GMT
மன அழுத்தம், தசை பிடிப்பு, தூக்கமின்மை, சரியான முறையில் அமராமல் இருப்பது போன்றவையும் கழுத்துவலி ஏற்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன.
ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் கழுத்துவலி பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தம், தசை பிடிப்பு, தூக்கமின்மை, சரியான முறையில் அமராமல் இருப்பது போன்றவையும் கழுத்துவலி ஏற்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன.

திடீரென்று கழுத்துவலி ஏற்பட்டால் கழுத்தை கீழ்நோக்கி தாழ்த்தி தாடைப் பகுதி மார்பு பகுதியில்படும்படி ஐந்து விநாடிகள் வைத்திருக்க வேண்டும். அதுபோல் ஐந்துமுறை செய்ய வேண்டும்.

கழுத்தை ஒருபக்கமாக சாய்த்து 5 முதல் 7 விநாடிகள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். அப்போது கழுத்தின் முதுகெலும்பு பகுதி நேராக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பின்னர் கழுத்தை மெதுவாக மற்றொரு பக்கத்தை நோக்கி திருப்ப வேண்டும். இதுபோல் இருபக்கமும் கழுத்தை திருப்பி ஐந்து முறை செய்ய வேண்டும்.

தோள்பட்டை மீது கழுத்தை நன்றாக சாய்த்து ஐந்து விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுத்தை நேராக நிமிர்த்த வேண்டும். பின்பு மறுபுறம் கழுத்தை வளைத்து 5 விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சியை குறைந்தது ஐந்து முறை செய்ய வேண்டும்.

கழுத்தை நேராக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கழுத்தை முன் நோக்கி தள்ள வேண்டும். அப்போது தோள்பட்டையின் இரு பகுதிகளையும் பின்னோக்கி இழுத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஐந்து விநாடிகள் இந்த நிலையிலேயே வைத்திருந்தால் கழுத்து தசைகளில் நெகிழ்வு ஏற்படும்.

சரியான நிலையில் அமர்ந்திருப்பதும், நன்றாக தூங்குவதும் கழுத்துவலி வராமல் தடுக்க உதவும்.

ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Tags:    

Similar News