லைஃப்ஸ்டைல்
பேரீச்சம் பழம்

தினமும் 4 பேரீச்சம் பழம்

Published On 2020-03-22 04:30 GMT   |   Update On 2020-03-19 09:25 GMT
பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதுதான். ஆனால் அதிகமாக சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதுதான். ஆனால் அதிகமாக சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதற்கேற்ப கலோரி அளவும் அதிகம் இருக்கிறது. ஒரு கிராம் பேரீச்சம் பழத்தில் 2.8 கலோரி இருக்கிறது. அதனால் அதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமன் கூடும். பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. அதுவும் உடலுக்கு ஏற்றதல்ல. அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பேரீச்சம் பழத்தில் சல்பைடும் மிகுதியாக இருக்கிறது. அதனை அதிகமாக சாப்பிடும்போது அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உலர்ந்த பேரீச்சம் பழங்களை அதிகமாக சாப்பிடும்போது சரும எரிச்சல் ஏற்படும். அதுபோல் ஆஸ்துமாவுக்கு காரணமான அலர்ஜியையும் ஏற்படுத்தக்கூடும். அதனால் ஆஸ்துமா நோயாளிகள் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. திறந்தவெளியில் விற்பனை செய்யப்படும் பேரீச்சம் பழங்களை சாப்பிடக்கூடாது. அவை ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். பேரீச்சம் பழத்தில் பிரக்டோஸ் இருப்பதால் இயற்கையாகவே இனிப்பு தன்மை கொண்டது. அது எளிதில் ஜீரணமாகாது. சாப்பிடும்போது பிரக்டோஸ் உறிஞ்சப் படாமல் நேரடியாக குடலுக்கு சென்றுவிடும். அது அங்குள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து வயிற்று வலி, வாயு தொந்தரவு, வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

உலர்ந்த பேரீச்சம் பழங்களின் மேல்பகுதி தடினமாக இருக்கும். அதனால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் ஜீரணம் தாமதமாகும். குறிப்பாக பேரீச்சம் பழம் குழந்தைகளுக்கு செரிமானம் ஆவதில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு பேரீச்சம் பழங்களை அப்படியே சாப்பிட கொடுக்கக்கூடாது. ஜூஸாக தயாரித்து கொடுக்கலாம். பெரியவர்களுக்கு தினமும் 4 பேரீச்சம் பழங்கள் போதுமானது.
Tags:    

Similar News