லைஃப்ஸ்டைல்

பக்கவாதம் வராமல் காத்து கொள்வது எப்படி?

Published On 2019-04-27 07:55 GMT   |   Update On 2019-04-27 07:55 GMT
பக்கவாதம் யாருக்கும் எந்த நேரமும் ஏற்படலாம். சில தவிர்ப்பு முறைகளை கையாளுவதன் மூலம் நம்மால் இயன்ற வழியில் இத்தாக்குதலை தவிர்த்துக் கொள்ளலாம்.
பக்கவாதம் யாருக்கும் எந்த நேரமும் ஏற்படலாம். சில தவிர்ப்பு முறைகளை கையாளுவதன் மூலம் நம்மால் இயன்ற வழியில் இத்தாக்குதலை தவிர்த்துக் கொள்ளலாம். அவைகளைப் பற்றி அறிவோமாக.

பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் ரத்தத்தில் அடைப்பு ஏற்படுவதாகும். இதனால் ஆக்சிஸன் கிடைக்காது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதனால் கை, கால் அசைவின்மை, பேச முடியாமை போன்ற பல தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இவற்றினைத் தவிர்க்க
 
* உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் எப்பொழுதும் இதனை மருத்துவ அறிவுரைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* கொலஸ்டிரால் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

* இருதய நோய் பாதிப்பு உடையவர்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் கூடுதல் என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* மது பழக்கத்தினையும், புகை பிடித்தலையும் அடியோடு நிறுத்தி விடுவது நல்லது.

* அதிக எடை இல்லாமல் சரியான எடையில் உடல் இருக்க வேண்டும்.

* அதிக மன உளைச்சல் இல்லாது இருப்பது மிக அவசியமாகும்.

முதுமை பக்கவாதத்திற்கு கூடுதல் காரணம் ஆகின்றது. என்றாலும், ஆரம்ப காலத்தில் இருந்தே நம்மை முறையாக பாதுகாத்துக் கொண்டால் பக்கவாத தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

இரவில் தூக்கம் வரலையா? இந்த காரணங்களும் இருக்கக்கூடும்.

* மிகவும் மன உளைச்சல், கவலை. இவை வாட்டி வதைக்கின்றதா? தூக்கம் அடியோடு கெட்டு விடும்.

* தூங்கும் நேரத்திற்கு முன்பு அதிக வேலை செய்தால் தூக்கத்திற்கு உடல் தயாராகும் நேரம் கெட்டுவிடும். தூங்கப் போவதற்கு முன்பு இனிய இசை கேளுங்கள். நல்ல புத்தகம் படியுங்கள்.

* மாதவிடாய், மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஹார்மோன் மாறு பாட்டினால் தூக்கம் மாறுபடலாம்.

* புகை பிடிப்பவர்களுக்கு கண்டிப்பாய் தூக்கம் கெடும்.

* பகலில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு இரவில் தூக்கம் வராது.

* அதிக காபி, சதா கம்ப்யூட்டர், செல்போன் இவை தூக்கத்தினைக் கெடுக்கும்.
Tags:    

Similar News