லைஃப்ஸ்டைல்

ஆரோக்கியத்திற்கு பந்து நாற்காலி

Published On 2018-11-27 02:31 GMT   |   Update On 2018-11-27 02:31 GMT
நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம்.
அலுவலகத்தில் வேலைப்பளுவை குறைக்க வேலைக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அது மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலையை விரைவாக செய்து முடிக்கவும் தூண்டுகோலாக அமையும். நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்.

அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம். அது சமநிலையில் அமர்ந்து வேலை பார்ப்பதற்கு வழிவகை செய்யும். முதுகெலும்புக்கு பலத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் பந்து நாற்காலிக்கு பங்கு இருக்கிறது. ஒரு மணி நேரம் அதில் அமர்ந்திருந்தால் 112 முதல் 165 கலோரிகள் செலவாகும்.

அதுபோல் நின்று கொண்டு வேலை பார்ப்பது உடல் எடையை குறைக்க உதவும். அதன் மூலம் அதிக கலோரிகள் செலவாக வாய்ப்பு இருக்கிறது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். அத்துடன் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தினமும் 200 படிக்கட்டுகள் ஏறி இறங்குவது நல்லது.

அதன் மூலம் 100 கலோரி செலவாகும். அலுவலக வேலையில் நெருக்கடிகள் அதிகரிக்கும்போது சில நிமிடங்கள் தியானம் செய்தும் வரலாம். சுவாச பயிற்சிகள் மேற்கொண்டால் மன அழுத்தம் குறையும். யோகாசனமும் செய்து வரலாம். அது நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கி மனதை இலகுவாக்கும். சில நிமிடங்கள் செலவிட்டாலே உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்றுவிடும். அதன் மூலம் பார்க்கும் வேலையில் ஆழ்ந்த கவனம் செலுத்தலாம்.
Tags:    

Similar News