லைஃப்ஸ்டைல்

மயக்கம் வருவதற்கான காரணங்கள்

Published On 2018-08-16 07:32 GMT   |   Update On 2018-08-16 07:32 GMT
நான் நல்ல தான் இருந்தேன், ஆனால் திடீரென்று மயக்கம் ஏற்பட்டு என் நினைவுகள் இழக்கிறேன் என புலம்புவர்களா? இதற்கான காரணங்களை என்ன என்று பார்க்கலாம்.
சில பேருக்கு திடீரென மயக்கம் வரும். அப்படி மயக்கம் வரக்காரணம் என்னவாக இருக்கும் என யோசனை செய்துள்ளீர்களா? நான் நல்ல தான் இருந்தேன், ஆனால் திடீரென்று மயக்கம் ஏற்பட்டு என் நினைவுகள் இழக்கிறேன் என புலம்புவர்களா? இதற்கான காரணங்களை என்ன என்று தெரியுமா?

மருத்துவ ஆராய்ச்சியின் படி மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உணர்வுதான் இந்த மயக்கம் வர காரணம் என தெரியவந்துள்ளது.

மயக்கம் வர முக்கிய காரணங்களை பார்ப்போம் என்னவென்று பார்ப்போம்.

* நமது உடம்பில் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக கூட மயக்கம் வரலாம். இது அனேகமாக வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கும். அதாவது 65 வயது கடந்தவருக்கு தான் குறைந்த இரத்த அழுத்தத்தால் மயக்கம் ஏற்படும்.

* உடலில் உள்ள நீரின் சமநிலை சேதப்படும் போது ரத்தின் வேகம் குறைந்து இரத்த அழுத்தம் வேகமாகும். அப்பொழுது உடம்பில் நடுக்கம் ஏற்பட்டு நரம்புமண்டலம் பாதிக்கப்படும். இந்த சமயத்தில் மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

* இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. இரத்ததில் சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளில் இரத்தம் சரியாக செல்லாது, அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படும், அதிகமாக தாகமெடுக்கும் போன்ற அறிகுறிகள் உடம்பில் ஏற்படும். அச்சமயங்களில் உடல் சோர்வடைந்து மயக்கம் ஏற்படலாம்.

* இருதயத் தசைகளும், இரத்தக் குழாய்களும் வலுவிழந்து விடுவதாலேயே இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் தடங்கள் ஏற்பட்டு மயக்கம் வரும். இதை மருத்துவரீதியில் இதய மயக்கநிலை என்பார்கள்.
Tags:    

Similar News