லைஃப்ஸ்டைல்

தினமும் முட்டை சாப்பிடலாமா?

Published On 2018-07-01 05:58 GMT   |   Update On 2018-07-01 05:58 GMT
பல்வேறு விவாதங்களின் மையப்பொருளாக முட்டை இருந்துள்ளது. இன்று தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று குறித்து அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு விவாதங்களின் மையப்பொருளாக முட்டை இருந்துள்ளது. சிலர் மஞ்சள் கருவை தவிர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்றும், சிலர் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று கூறுகின்றனர். பல்வேறு விவாதங்களின் முடிவுக்கு பின்னர், நாம் அறிந்து கொள்வது மஞ்சள் கரு தொடர்ந்து உட்கொள்ளக் கூடாது. இதனால் கொழுப்பின் அளவு அதிகரித்து, இதய நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.

முட்டையில் அதிகப்படியான டயட்டரி கொழுப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு முட்டையில் 185 மி.கி அளவிற்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் கொழுப்பின் அளவின் அதிகரிப்பது, உணவில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பே(saturated fat) ஆகும். உணவில் இருக்கும் சாதாரண கொழுப்பால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், அதிலிருக்கும் கொழுப்பு பிரிந்து முழு மூலக்கூறாக உட்கிரகிக்கப்படாது. அதேசமயம் நிறைவுற்ற கொழுப்பு(saturated fat) சிறிய, சிறிய கொழுப்பு அமிலங்களாக பிரிந்து, உடல் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

டயட்டரி கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, உடல் கொழுப்பை சிறிதளவே அதிகரிக்கச் செய்கிறது. நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், LDL(கெட்ட கொழுப்பு) மற்றும் HDL(நல்ல கொழுப்பு) ஆகியவற்றுக்கு இடையேயான விகிதாச்சாரம் ஆகும். முட்டையானது LDLஐ விட, HDLஐ அதிகரிக்கச் செய்கிறது. இதன்மூலம் இதய பிரச்சனைகள் அதிகரிக்கிறது.

தினசரி ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், இதய பிரச்சனைகள் ஏற்பட 11% குறைந்த வாய்ப்பே உருவாகிறது. உயிரிழப்புகளில் இருந்து 18% குறைந்த வாய்ப்பை உருவாக்குகிறது. இதய அடைப்பு ஏற்படுவதில் இருந்து 26% குறைந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.


முட்டை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் நீண்ட பட்டியலாக இருக்கிறது. முட்டையில் விட்டமின் இ, போலேட், செலினியம், லுடெய்ன், புரோட்டீன், மினரல்கள் இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் மூளை ஆரோக்கியம், பார்வை, நோய் எதிர்ப்பு ஆகியவற்றிற்கு பெரிதும் உதவுகின்றன.

உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, முட்டை மிகச்சிறந்த காலை உணவாகும். முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீன், நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த காலை உணவை உட்கொண்டால், விரைவில் பசியெடுக்கும் சூழல் உண்டாகும். அதிக நார்ச்சத்து, அதிக கார்போஹைட்ரேட் கொண்ட ஓட் மீல் உடன் முட்டை சேர்த்துக் கொள்ளலாம். இதுவே ஆரோக்கிய மற்றும் அதிகப்படியான காலை உணவாக அமைகிறது.

வேக வைத்த முட்டைகள் மிக ஆரோக்கிய உணவாகும். இதனுடன் வேறு எதையும் சேர்த்து உண்ண வேண்டிய அவசியமில்லை.
Tags:    

Similar News