பெண்கள் உலகம்

வயிற்று கோளாறுகளை நீக்கும் ஓம வாட்டர்

Published On 2018-05-22 08:24 IST   |   Update On 2018-05-22 08:24:00 IST
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்ல ஓம வாட்டரை வைத்திருப்பது நல்லது. இதில் பக்க விளைவுகள் இல்லை.
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வயிற்று உபாதை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. ருசியான உணவு வகைகளை கண்டதும், வாயை கட்டாது, வயிறு நிறைய உண்டு விட்ட கஷ்டப்படுவது நம் பழக்கம். இதனால் நமக்கு வயிற்று வலி ஏற்படுகிறது.

முதலில் இந்த வயிற்று வலி எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். நமது இரைப்பையின் உள் தசைச்சுவர்கள் எந்நேரமும் அலை போன்ற அசைவுகளை கொண்டு இருக்கும்.

இதனை தசை இயக்கம் என்கிறார்கள். நாம் நம் உடலுக்கு ஒத்துவராத உணவுகளை உட்கொள்ளும் போது அது இரைப்பையை அடையும் நிலையில் இரைப்பை செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

இந்த உணவு இரைப்பையின் அசைவை சிதைக்கிறது. இந்த சிதைவையே நாம் வயிற்றுவலியாக உணர்கிறோம். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் உடனே டாக்டரை தேடி ஓடலாம் அல்லது 24 மணி நேரமும் திறந்து இருக்கும் மருந்து கடைகளை நாடி செல்லலாம். ஆனால் கிராமப்புற மக்கள் இதைப்போன்ற வசதிகளை எதிர்பார்க்க முடியாது.

எனவே கைவசம் இவ்வாறு வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்ல ஓம வாட்டரை வைத்திருப்பது நல்லது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. பக்க விளைவுகள் இல்லை. மருத்துவ குணங்கள் பல உடையது.

செய்முறையும் எளிது. செலவும் மிக குறைவு. எனவே லாபம் அதிகமான தொழிலாக இதனை வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். 
Tags:    

Similar News