லைஃப்ஸ்டைல்

நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்க...

Published On 2016-10-22 01:44 GMT   |   Update On 2016-10-22 01:44 GMT
நாம் அன்றாடம் சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், நம்மை அச்சுறுத்தும் பலவித நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம்.
நாம் அன்றாடம் சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், நம்மை அச்சுறுத்தும் பலவித நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம்.

குறிப்பாக, நுரையீரல் தொற்றுகளில் இருந்து விடுபடுவதற்கு வைட்டமின்கள், மினரல், புரதம், பைட்டோ சத்துகள், ஆன்டி ஆக்சிடென்டுகள் போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும்.

மழை, குளிர் காலங்களில் நுரையீரல்கள் அதிகம் தாக்கத்துக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அதற்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

உதாரணமாக, இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால், குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்றுகளை தடுக்க முடியும்.

கேரட் மற்றும் கொத்துமல்லியை சம அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதளவு இஞ்சித் துண்டை சேர்த்து அரைத்து ஜூஸ் போல தயாரித்துப் பருகினால், உடலின் சக்தியை அதிகரித்து, அசதியைப் போக்கும்.

மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நுரையீரல் தொற்றுகளைத் தடுக்கலாம், பலவித ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

பட்டாணியில் புரதம், வைட்டமின் ஏ, சி, கே, இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், பொட்டாசியம் போன்ற நம் உடல் ஆரோக்கியத்துக்கான சத்துகள் நிறைந்துள்ளன. குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் அலர்ஜியையும் பட்டாணியில் உள்ள சத்துகள் போக்குகின்றன.

பசலைக் கீரையில் 30 வகையான பிளேவனாய்டுகள் உள்ளன. எனவே இந்தக் கீரையை நம் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் புற்றுநோய், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

Similar News