பெண்கள் உலகம்

ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சனை

Published On 2016-04-18 11:40 IST   |   Update On 2016-04-18 11:40:00 IST
கணவன் மனைவி இருவரும் விந்து முந்துதல் பற்றிய பிரச்சனையை பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள்.
கணவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே விந்து முந்துதல் பற்றிய பிரச்சனையை பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். .

விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சனையாகும்.

பத்து ஆண்களில் ஒருவர் என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. உறவின் போது பெண் உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.

இது ஆண்மைக் குறைபாட்டினால் ஏற்படுவதல்ல. இங்கு ஆண் உறுப்பு விறைப்படுவதில் பிரச்சனை இருப்பதில்லை.

பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. இருந்தபோதும் பல நடுத்தர வயதில் உள்ள ஆண்களையும் இது பாதிப்பதும் உண்மையே.

விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங்களில் வெளியேறியது.

சாதாரணம் எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இருந்தது.

இருந்தபோதும் 25 நிமிடங்கள் வரை எடுத்த சில ஆண்களும் கூட தமக்கு விந்து முந்தி வெளியேறிவிடுவதாகக் கவலைப்பட்டதுண்டு.

எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும் என்பது தெளிவாகிறது.

இதனால்,

தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள்.

இது ஒரு பரவலான பிரச்சனை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். பதற்றமான சூழ்நிலைகளில் ஆரம்ப காலங்களில் உறவு கொண்டவர்களுக்கு இது கூடுதலாக நடப்பதாக தெரிகிறது.

உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

Similar News