லைஃப்ஸ்டைல்

கோடை காலத்தில் முதியவர்களின் உணவுமுறை

Published On 2016-04-04 06:29 GMT   |   Update On 2016-04-04 06:29 GMT
கோடை காலத்தில் முதியவர்களுக்குத் தாகம் குறைவாகவே இருக்கும். கல்லீரல், சிறுநீரகம், இதயம் நன்றாக இயங்கக்கூடிய முதியவர்கள் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.
முதியவர்கள், கோடை காலத்தில் உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். சூடான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். பூசணிக்காய், வெள்ளரி, சுரைக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மணத்தக்காளி, வெந்தயக் கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை என தினமும் ஒரு கீரை உணவில் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

கொத்தமல்லி, புதினா போன்றவற்றைத் துவையலாகச் செய்து சாப்பிடுங்கள்.  காபி, டீ, குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை அருந்துவதைவிட, ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை நீர்மோர் அருந்துங்கள்.

அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தாகத்தைத் தணிப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்குத் தரும்.  ஒரே வகையான உணவையே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்காமல், தினமும் விதவிதமான நிறத்தில் இருக்கும், பல்வேறு வகையான காய்கறிகளை, உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Similar News