உடற்பயிற்சி

யோகா முத்திரைகளும்- பயன்களும்

Published On 2024-03-27 10:30 GMT   |   Update On 2024-03-27 10:30 GMT
  • யோகா செய்பவர்களுக்கு மனவலிமை அதிகரிக்கும்.
  • யோகாவில் ஒரு அம்சம் தான் முத்திரைகள்.

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் தான் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்த பஞ்ச பூதங்களால் ஆனவையே. மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு, இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

 கப நாச முத்திரை:

முதலில் சுண்டு விரலை மடக்கவும். மோதிர விரலை சுண்டுவிரலின் பாதி அளவிற்கு மடக்கவும். கட்டைவிரலை மோதிர விரலின் முதல் முட்டியிலும், சுண்டுவிரலின் இரண்டாவது முட்டியிலும் படும்படி அழுத்திப் பிடிக்கவும். இவ்வாறு 30 வினாடிகளிலிருந்து 15 நிமிடம் வரை பயிற்சி செய்தால் மேலே குறிப்பிட்ட நோய்கள் நீங்கும்.

பயன்கள்

ஆயுர்வேதத்தின் படி பித்த நாடி குறைந்து, கப நாடி கூடினால், சுறுசுறுப்பின்மை, உடல் அதீத குளிர்ச்சி அடைதல், தன்னம்பிக்கை இழத்தல், ஜீரணக் கோளாறு, நீண்ட நேரம் செரிமாணம் ஆகாமல் இருத்தல், தாகமின்மை, மாதவிடாய் கோளாறு, தைராய்டு சுரப்பியின் குறைவான செயல்பாடு (ஹைபோ தைராடிசம்),அதிகச் சளித் தொந்தரவு, ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், கண்நோய்கள், உதாரணமாக கண்களில் அதிக நீர் சுரத்தல், பூளை கட்டுதல் போன்றவை, ரத்த ஓட்டம் சீராகஇல்லாமை, அதிக எடை, போன்ற நோய்குறிகள் ஏற்படும். இதை போக்குவது இந்த கப நாச முத்திரை.

 முகுள முத்திரை:

நான்கு விரல் நுனிகளையும் பெருவிரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

பயன்கள்

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையை பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையும்.

 கணேச முத்திரை:

வலது உள்ளங்கை மார்பு பகுதியை பார்த்தவாறு இருக்க வேண்டும். இடது கை விரல்களால் இறுகப்பற்றி சங்கிலிபோல் இணைக்க வேண்டும். 6 முறை சீரான சுவாசம் விட்டு செய்தபின் இடது உள்ளங்கை மார்பை பார்த்தபடி வைத்து செய்ய வேண்டும்.

பயன்கள்

ரத்தம் சுத்தமாகி ரத்த ஓட்டம் சீராகும். இதயம், நுரையீரல் நன்கு செயல்படும். நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்.

 ஆகாஷ் முத்திரை:

நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ள வேண்டும்.

பயன்கள்

சைனஸ் தொந்தரவு, தலைவலி, காது வலிகளை குணப்படுத்தும். நெஞ்சு படபடப்பை குறைக்கும். கல்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும். இந்த முத்திரையை தினமும் 45 நிமிடங்கள் அல்லது குறைந்தது 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத்தரும். காலை 2 மணிமுதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும். இந்த முத்திரையை அமர்ந்திருந்து மட்டுமே செய்தல் வேண்டும்.

Tags:    

Similar News