லைஃப்ஸ்டைல்

தியானம் - யோகா இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, வேறுபாடுகள்

Published On 2019-06-03 06:09 GMT   |   Update On 2019-06-03 06:09 GMT
தியானம் - யோகா, இவையிரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் என்னென்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
யோகா என்றால் பெருவாரியான மக்கள் யோகாசனங்களை யோகா என்று நினைக்கிறார்கள். அடிப்படையில் யோகாவிற்கு எட்டு அங்கங்கள் உண்டு அவை,

இயமம்.
நியமம்.
ஆசனம்.
பிராணாயாமம்.
பிரத்யாஹரம்.
தாரனை.
தியானம்.
சமாதி.

தியானம் என்பது யோகத்தின் எட்டு அங்கங்களில் ஒன்று.

தியானம்,

தியானம், இந்தக் கருவியின் மூலம் நிதர்சனமான உண்மை தன்மையை நாம் உணரலாம்.

யோகா,

யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள்.[1]

தியானம் யோகம் இவற்றில் உள்ள ஒற்றுமை என்றால் இவை அனைத்தும் அகமுக தொழில்களை சார்ந்தவைகள் உடலை பயன்படுத்தி செய்யப்படுவை.

தியானம் மட்டுமே பயில முடியும். உதாரணம் ரமண மகரிஷி புத்தர் போன்றவர்கள் தியானத்தின் மூலமே ஞானத்தின் உச்சத்தை அடைந்தவர்கள்.

யோகா, என்பது முன்பே பார்த்தது போல் அது ஒரு முழுமையான பயிற்சி தியானம் உட்பட அதனின் அங்கங்கள்.

யோகா முழுமையாக நீங்கள் பயின்றிருந்தால் உங்கள் உடலை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.

உதாரணமாக ரமண மகரிஷி மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் ஆன்மீக வாழ்வில் ஒரு கட்டத்தில் உடல் நோயால் பாதிக்கப் பட்டார்கள்.

நீங்கள் யோகத்தை முழுமையாக பயின்றிருந்தால் உங்கள் உடலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நீங்களாகவே சரி செய்து கொள்ள முடியும்.
Tags:    

Similar News