பெண்கள் உலகம்

மலச்சிக்கல் நீங்க உதவும் முத்திரை

Published On 2019-05-29 09:49 IST   |   Update On 2019-05-29 09:49:00 IST
இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கத்தின் காரணமாக பலருக்கும் மலச்சிக்கல் ஏற்பட்டு அதனால் அவதியுறுகின்றனர். மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் “சூச்சி” முத்திரை.
இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கத்தின் காரணமாக பலருக்கும் மலச்சிக்கல் ஏற்பட்டு அதனால் அவதியுறுகின்றனர். மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் “சூச்சி” முத்திரை.

செய்முறை:

முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இருக்கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களை மட்டும் வெளியே நீட்டி, மற்ற விரல்களை மேலே உள்ள படத்தில் காட்டியபடி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இம்முத்திரையை தினமும் காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் உணவு உட்கொள்வதற்கு அரை மணிநேரம் முன்பாக 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

பலன்கள்:


இம்முத்திரையை செய்வதால் நம் குடலின் செரிமான திறன் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். உடலில் நீர் வறட்சி ஏற்படாது. வயிறு, குடல் சிறுநீரகங்கள் நன்கு செயல்படும். கண்களின் வறட்சி நீங்கி கண்பார்வை தெளிவு ஏற்படும்.
Tags:    

Similar News