பெண்கள் உலகம்

கழுத்து, முதுகு, இடுப்புக்கு வலிமை தரும் புஜங்காசனம்

Published On 2018-06-27 08:32 IST   |   Update On 2018-06-27 10:13:00 IST
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
பெயர் விளக்கம்: ‘புஜங்க்’ என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுத்து நிற்பது போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை: கால்விரல்களையும், உள்ளங்கைகளையும், முழங்கால்களையும் ஆறாம் நிலையில் உள்ளபடியே வைத்துக் கொண்டு கைகளை நிமிர்த்தி மார்பை மேலே உயர்த்தவும். அதே சமயம் மூச்சை உள்ளுக்குள் இழுத்தபடி முதுகை வளைத்து தலையையும் முடிந்த அளவு பின்நோக்கி வளைக்கவும். கண்களால் புருவ நடுவை பார்க்கவும்.

மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடி வயிறு மற்றும் தண்டுவடத்தின் மீதும், சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்..

பயிற்சிக்குறிப்பு: ஆரம்பத்தில் சிலருக்கு கழுத்து வலியும், கைகளில் நடுக்கமும் உண்டாகலாம். ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் இந்தக் குறைபாடுகள் நீங்கிவிடும்.

தடை குறிப்புகள்: வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

பயன்கள்: கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும்.
Tags:    

Similar News