லைஃப்ஸ்டைல்
‘பல்பம்’ தின்னும் குழந்தைகள்

‘பல்பம்’ தின்னும் குழந்தைகள்

Published On 2021-11-23 07:28 GMT   |   Update On 2021-11-23 07:28 GMT
குழந்தைகள் வயிற்றில் பூச்சி, புழுக்கள் வளர்வதும் ஒருவகையில் அவர்கள் பல்பம் தின்பதற்கு காரணமாக இருக்கும். டாக்டர்களிடம் கலந்தாலோசித்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பள்ளி செல்லும் குழந்தைகள் எழுத்துக்களை சிலேட்டில் எழுதி பழகுவதற்கு உபயோகப்படுத்தும் பல்பம் எனப்படும் சிலேட் குச்சியை வாயில் வைத்து மென்று தின்கிறார்கள். சிறுமிகள்தான் அதிகமாக இதை தின்கிறார்கள். பின்னாளில் பல்பம் ஏற்படுத்தும் பாதிப்பால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள்.

பல்பத்தில் கால்சியம் கார்பனேட் எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தின்றால் சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும். பல்பம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகுவதற்கு உடலில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருப்பதே காரணமாகும்.

டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பக்க விளைவுகளால் அவதிப்பட நேரிடும். இரும்பு, கால்சியம் சத்து கொண்ட உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் பல்பம் மீதான மோகத்தில் இருந்துவிடுபடலாம்.

இரும்பு சத்து அதிகம் கொண்ட இறைச்சி வகைகள், இறால், வஞ்சீரம் போன்ற மீன் வகைகளை சாப்பிட்டு வரலாம். உலர்திராட்சை, உலர் பழங்கள், கோதுமை, சோயா, கீரை வகைகள், ஓட்ஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம். பால், பாலாடை கட்டி, தயிர், பாதாம் பருப்பு போன்ற கால்சியம் அதிகம் கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

குழந்தைகள் வயிற்றில் பூச்சி, புழுக்கள் வளர்வதும் ஒருவகையில் அவர்கள் பல்பம் தின்பதற்கு காரணமாக இருக்கும். டாக்டர்களிடம் கலந்தாலோசித்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Tags:    

Similar News