லைஃப்ஸ்டைல்

மாணவர்கள் வகுப்பு மாறும்போது கவனிக்க வேண்டியவை....

Published On 2019-06-03 02:53 GMT   |   Update On 2019-06-03 02:53 GMT
ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தினசரி கடைப்பிடிக்கவேண்டியது என்ன என்பதை இங்கு காண்போம்...
ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தினசரி கடைப்பிடிக்கவேண்டியது என்ன என்பதை இங்கு காண்போம்...

பள்ளிக்கு உரிய நேரத்தில் வருதல் வேண்டும்.

பள்ளிக்கு நாள்தோறும் தவறாமல் சீருடையில் வர வேண்டும்.

காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

மாணவர்கள் வகுப்பு அறை மற்றும் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

மாணவர்கள் புத்தகங்களை நாள்தோறும் தவறாமல் பள்ளிக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

தினந்தோறும் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை மாணவர்கள் கையேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.

அமைதியாகவும், பணிவாகவும், ஒழுக்கத் துடன் நடந்துகொள்ள வேண்டும்.

பேச்சு, செயல், எண்ணம் இவற்றில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், வயதில் மூத்தவர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.

பள்ளியில் பாடம் நடத்தத் தொடங்கும் முதல் நாளிலிருந்தே நாம் கவனத்துடன் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வது மட்டுமே படிக்கும் முறை என்று நினைக்க வேண்டாம்.

உங்கள் கவனம் முழுவதும் தினந்தோறும் வகுப்பில் நடத்தும் பாடங்களை நன்கு புரிந்துகொண்டு மீண்டும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் பட்சத்தில் பள்ளித்தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.

ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை அன்றைய நாளே, அன்றைய இரவே, புரிந்து, எழுதி படித்தால் ஆழ்மனதில் பதிந்து விடும்.

அறிவுப் பெட்டகமாக திகழும் ஆசிரியர்கள் சொல்வதை கடைப்பிடித்து, அவர்களை மதித்து அதன்படி நடந்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து, நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

பள்ளிக் கல்வித்துறையினர் இந்த விதிமுறைகளை பின்பற்ற மாணவர்களை அறிவுறுத்தி உள்ளனர். அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
Tags:    

Similar News