லைஃப்ஸ்டைல்

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?

Published On 2016-04-13 02:44 GMT   |   Update On 2016-04-13 02:44 GMT
சில குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள். எனவே குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்’ ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது.

இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம்.

இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும்.

ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான்.

எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும்.

Similar News