லைஃப்ஸ்டைல்

தொப்பையை விரைவில் குறைக்கும் 2 பயிற்சிகள்

Published On 2016-07-15 06:02 GMT   |   Update On 2016-07-15 06:02 GMT
உடல் பருமன், தொப்பை பிரச்சனைக்கு உரிய பயிற்சிகளும், ஒழுங்கான உணவுப் பழக்கமும் இருந்தால் தொப்பையை முழுமையாகக் குறைக்க முடியும்.
வயிற்றை உள்ளிழுத்துச் செய்யக்கூடிய எளிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது, தொப்பை வயிறும் ஒட்டிப்போகும். இதற்காக ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

அப்ஸ் கர்ல் (Abs curl) :

விரிப்பில் நேராகப் படுத்து, இரண்டு கால் முட்டிகளை மடித்து வைக்க வேண்டும். கண்கள் மேல் நோக்கி இருக்கட்டும். கைகளைத் தோள்பட்டைக்கு மேல் உயர்த்தி வைக்கவும். இப்போது, மேல் உடலை உயர்த்தி, இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் தூக்கி, கால் மூட்டைத் தொட வேண்டும். இந்த நிலையில் 60 விநாடிகள் இருந்த பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோன்று தொடர்ந்து 20 முறை செய்யவேண்டும்.

அப்ஸ் சைக்கிளிங் (abs cycling) :

தரையில் நேராகப்படுத்து இரண்டு கைகளையும் மடக்கி முதுகுக்கு பின்னால் வைத்து கொள்ளவும். இரண்டு கால்களையும் மேலே உயர்த்தவும். பிறகு சைக்கிள் பெடல் மிதிப்பது போல் இரண்டு கால்களையும் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி மாற்றி சைக்கிளிங் செய்யவும். இப்படித் தொடர்ந்து 20 முறை செய்யவும். இரண்டு நிமிட ஓய்வுக்கு பிறகு மீண்டும் இருமுறை இதுபோல் செய்ய வேண்டும்.

Similar News