பெண்கள் உலகம்

உடலின் கழிவுகள் வெளியேற உதவும் கழிவுநீக்க முத்திரை

Published On 2016-05-14 10:05 IST   |   Update On 2016-05-14 10:05:00 IST
கழிவுகளை முழுமையாக நீக்கிவிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.
கழிவுகளின் தேக்கம் நோய். அப்படியானால் கழிவுகளின் நீக்கமே மருந்து. எனவே கழிவுகளை முழுமையாக நீக்கிவிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

அதனால் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர் முதலில் இந்த முத்திரையைத் தொடர்ந்து ஒரு பதினைந்து நாட்கள் செய்ய வேண்டும். அதாவது ஒரு அமாவாசை நாளில் ஆரம்பிக்க வேண்டும். வளர்பிறை நாட்களில் செய்தால் நல்ல பலன் கிட்டும். இந்த முத்திரைக்கு பெயர் கழிவுநீக்க முத்திரை.

செய்முறை  :
 
கட்டை விரலின் நுனிப்பகுதியால் மோதிர விரலின் கீழ் அதாவது மூன்றாவது ரேகை உள்ள இடத்தை தொடவும். மெல்லிய அழுத்தம் போதுமானது. இந்த முத்திரையை சம்மணம், பத்மாசனம், சித்தாசனம் நிலையில் அமர்ந்து சுவாசத்தை சாதாரணமாக நிலையில் வைத்து அதை கவனித்து வரவேண்டும்.

20 நிமிடங்கள் செய்யும் போது உடலின் கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும். அப்போது சிறுநீர் அதிகம் போவது, அதில் வாடை வீசுவது, மலம் அதிக வாடையுடன் அடிக்கடி போவது, கறுத்து மலம் வெளியேறுவது.

வியர்வை அதிகம் வெளியேறுவது, அதில் வாடை வீசுவது, பேதி உண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலை விட்டு நீங்குவதாக அர்த்தம். பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது.

Similar News