லைஃப்ஸ்டைல்

கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி

Published On 2016-05-07 02:45 GMT   |   Update On 2016-05-07 02:45 GMT
சுவையான சத்தான கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
 
கோதுமை ரவா- 1 கப்.
தயிர் - 1 1/2 கப்.
கடுகு - 1 தேக்கரண்டி.
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி.
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய் - 1.
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 1 ஸ்பூன்.
 
செய்முறை :
 
* ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவைம், உப்பு, தயிரையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை ரவை கலவையில் கொட்டவும்.
 
* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி 8 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான சத்தான கோதுமை ரவா இட்லி ரெடி.

* காம்பினேஷன் மிளகாய் துவையல் மற்றும் தேங்காய் சட்னியாகும்.

* விருப்பப்பட்டால் கேரட்டை துருவி சேர்க்கலாம். அல்லது காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.

- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News