லைஃப்ஸ்டைல்

சுலபமாக செய்யக்கூடிய தயிர் இட்லி

Published On 2016-05-04 05:00 GMT   |   Update On 2016-05-04 05:00 GMT
சுலபமான முறையில் தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

இட்லி மாவு - 2 கப்,
புளிக்காத தயிர் - 1 கப்
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

அரைக்க :


தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
முந்திரிப்பருப்பு - 6.

தாளிக்க :

கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :

* மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து தயிரில் கொட்டி உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.

* பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி  கெத்தமல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.

* அல்லது வெறும் கொத்தமல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

* இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

-  உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 

Similar News