ஆசிரியர் தேர்வு

கல்லடையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2023-06-13 12:59 IST   |   Update On 2023-06-13 12:59:00 IST
  • கல்லடையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
  • அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லடை ஊராட்சி பகுதியில் சுமார் 1500க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர், தற்பொழுது குருவை சாகுபடி செய்த நெல்களை அறுவடை செய்து விற்பனை செய்வதற்காக கல்லடைப்பகுதி மாரியம்மன் கோவிலில் வைத்துள்ளனர். கடந்த ஆண்டு கல்லடை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு செயல்படாததால், குவித்து வைத்துள்ள நெல் மணிகள் திடீரென பெய்யும் மழையில் நனைய நேரிடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள்

கல்லடையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி தோகைமலை முதல் திருச்சி செல்லும் சாலையில் கல்லடை கைகாட்டி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இப்பகுதி மூன்று ரோடுகள் இணைக்கும் பகுதி என்பதால் மூன்று புறங்களில் இருந்தும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனை அறிந்த தோகைமலை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த டிஎஸ்பிஸ்ரீதர் மற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News