வழிபாடு

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-03-25 07:40 GMT
  • பிரம்மோற்சவ விழா 27-ந் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது
  • நாளை 26-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவம் கடந்த 13-ந் தேதி விக்னேஸ்வரர் உற்சவத்துடன் தொடங்கியது.

இந்த பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் உற்சவர் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து நாளை 26-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை வேத பாராயணம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News