வழிபாடு

திருப்பதி கோவிலில் பவுர்ணமி கருட சேவை 5-ந்தேதி நடக்கிறது

Published On 2023-02-03 08:54 GMT   |   Update On 2023-02-03 08:54 GMT
  • 5-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
  • தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார்.

சேஷாசலம் மலைத்தொடரில் 3 கோடி தீர்த்தங்கள் உள்ளது. அதில் 7 முக்கிய தீர்த்தங்களான ஏழுமலையான் கோவில் புஷ்கரணி, ஆகாச கங்கை, பாபவிநாசனம், தும்புரு தூர்த்தம், குமாரதாரா, பாண்டவர் மற்றும் ராமகிருஷ்ண தீர்த்தம் ஆகியவை ஆகும்.

ராமகிருஷ்ண தீர்த்தம் திருமலை கோவிலில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ளது. அங்கு 5-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது. அங்குள்ள ராமர் மற்றும் கிருஷ்ணர் சிலைகளுக்கு கோவில் அர்ச்சகர்கள் சிறப்புபூஜைகளை செய்து அங்கிருந்து திருமலைக்கு திரும்புவர்.

அன்று பவுர்ணமியையொட்டி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Tags:    

Similar News