வழிபாடு

கூடலூரில் சனி பகவான் கோவில் திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2022-11-30 06:47 GMT   |   Update On 2022-11-30 06:47 GMT
  • 5-ந்தேதி சனி பகவானுக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
  • 6-ந்தேதி ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

கூடலூர் 27-வது மைல் பகுதியில் சனி பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் தீப திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 3-ந் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், நவகிரக பூஜை நடக்கிறது.

தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. 4-ந் தேதி காலை 6 மணி முதல் பல்வேறு விசேஷ பூஜைகள், அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை அய்யப்ப பக்தர்களின் பஜனை வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் 5-ந் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள், தொடர்ந்து இரவு 8 மணி வரை சனி பகவானுக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 6-ந் தேதி காலை 5 மணிக்கு ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு கார்த்திகையை ஒட்டி தீப திருவிழா நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags:    

Similar News